ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ்(66), உடல்நலக் குறைவால் பெங்களூருவில் நேற்று இரவு காலமானார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழிலும் ப்ரியா படத்தில் நடித்தார். இவர், நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
அம்பரீஷின் மரண செய்தி அறிந்தவுடனேயே டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார் ரஜினி. எனது நண்பனை இழந்துவிட்டேன் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு கன்னட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினியும் பெங்களூருக்கு சென்று அம்பரீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறினார்.