ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராதா மோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் '60 வயது மாநிறம்' படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படத்தை எப்போது எடுத்து முடித்தார்கள் என்றே தெரியவில்லை, ஆகஸ்ட் வெளியீடு என்று முதல் பார்வையுடன் நேற்று அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார்கள். வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.
இந்தப் படத்தின் முதல் பார்வையைப் பார்த்ததுமே இது 'கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னடப் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு எழுந்துவிட்டது. அறிமுக இயக்குனர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் அனந்த் நாக், ரக்ஷித் ஷெட்டி, வசிஷ்ட சிம்ஹா, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த படம் இது.
அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட அனந்த்நாக் காணாமல் போய் விடுகிறார். அமெரிக்காவில் செட்டில் ஆக நினைக்கும் அவருடைய மகன் ரக்ஷித் ஷெட்டி முதியோர் இல்ல டாக்டரான ஸ்ருதிஹரிஹரனுடன் அப்பாவைத் தேட ஆரம்பிக்கிறார். ஆனால், அனந்த்நாக் கொலைகாரரான வசிஷ்டா சிம்ஹாவிடம் சிக்கிக் கொள்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் அந்தக் கன்னடப் படத்தின் கதை.
'60 வயது மாநிறம்' படத்தின் முதல் பார்வையைப் பார்க்கும் போது அனந்த்நாக் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ரக்ஷித் ஷெட்டி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு, வசிஷ்டா சிம்ஹா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இளையராஜா இசையில் ராதா மோகன் இயக்கும் முதல் படம், விக்ரம் பிரபு நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.