பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் |

மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் ஜெயின்ராஜ் தயாரிக்கும் படம் 'ரஜினி கேங்'. 'பிஸ்தா' திரைப்படம் மற்றும் 'உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்குகிறார்.
ரஜினி கிஷன் நாயகனாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஜோன்ஸ் ரூபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார், எம்.எஸ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது "ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது" என்றார்.