வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'திரிஷ்யம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியானாலும் கூட அந்த படமும் முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் தனது மனைவி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன் உடலை, மோகன்லால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு போலீஸ் ஸ்டேஷனுக்குள் அதுவும் இன்ஸ்பெக்டர் அறையில் புதைத்து வைப்பார். இந்த விஷயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியதுடன் இப்படி ஒரு கிளைமாக்ஸை வைத்ததற்காக ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்திற்காக முதலில் தான் யோசித்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வேறு என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் இறுதி காட்சியில் இறந்த இளைஞனின் உடலை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு அந்த இடத்தின் மேலேயே நின்று மோகன்லாலும் அந்த இளைஞனின் பெற்றோரும் உருக்கமாக பேசுவது போல தான் கிளைமாக்ஸ் காட்சியை உருவாக்கி இருந்தேன். ஆனால் அது ஏதேச்சையாக அமைந்தது போல இல்லாமல் சுவாரசியத்திற்காக ஏதோ தற்செயலாக திணிக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் நான் கேரள போலீஸுக்காக ஒரு டாக்குமென்டரி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அந்த உடலை புதைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் பிறகு தான் படத்தின் கிளைமாக்ஸை மாற்றினேன்” என்று கூறியுள்ளார்.