விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

சென்னையில் நடந்த பேட் கேர்ள் பட விழாவில் இனி படம் தயாரிக்க மாட்டேன். அது, கஷ்டமாக இருக்கிறது. கடையை மூடுகிறேன் என்று அறிவித்தார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், பண பிரச்னை, கடன் காரணமாக அவர் பட நிறுவனத்தை மூடுவதாக கூறப்பட்டது. ஆனால், அவரோ இதை மறுத்துள்ளார். பல்வேறு பணிகள் காரணமாக, பட நிறுவனத்தை மூடுகிறேன். இழப்பு, பணப்பிரச்னை அல்ல என்கிறார்.
இது குறித்து விசாரித்தால், தனது கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் உதயம் என்எச்4, கொடி, காக்காமுட்டை, பொறியாளன், விசாரணை, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தார் வெற்றிமாறன். இதில் பல படங்கள் லாபத்தை தரவில்லை. கடைசியாக அவர் தயாரித்த மனுஷி, பேட் கேர்ள் படம் சென்சாரில் சிக்கியது. வழக்குகளை, கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அவருக்கு பல கோடி இழப்பு. இந்த விமர்சனங்கள் காரணமாக பேட் கேர்ள் படமும் படு தோல்வி அடைந்தது.
இனி, அவர் படம் தயாரித்தால் ரிலீஸ் செய்ய, வியாபாரம் செய்ய பல தடைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், பட நிறுவனத்தை மூடியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் கதைகளை தவிர்த்து, சிக்கலான, பஞ்சாயத்துகளை கதைகளை அவர் தேர்ந்தெடுத்ததால் மக்கள் அந்த படத்தை ரசிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.