சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் |

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சம்பள விஷயத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தயாரிப்பாளர் சங்கம் பின்னணியில் இருந்து தொடங்கியதாக கூறி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று பெப்சி அறிவித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் என்பவரை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.