நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இங்கே தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பற்றி கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பரபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அங்கே மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பிரித்விராஜ் டைரக்ஷனில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் கூட சென்சாரில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து தான் வெளியானது. ஆனால் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க படத்தின் இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் காரணம்.
ஏனென்றால் குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். 'என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது கூட்டணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.