ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. 1800 கோடி வரை இந்தப் படம் வசூலித்தது. காட்டில் செம்மரங்களைக் கடத்தும் புஷ்பராஜ் என்ற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
காடு, மரக் கடத்தல் என்றாலே தமிழக, கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் பெரும் கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பன் தான் ஞாபகம் வரும். அவன் உயிரோடு இருந்த காலத்தில் நாளிதழ்களை படித்தாலே பல கடத்தல் கதைகளை எழுதிவிடலாம். ஆந்திராவில் செம்மரக் கடத்தல் என்பது பிரபலம். அதனால், 'புஷ்பா 2' படத்தில் அதை மையமாக வைத்தார்கள்.
தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த்தின் 100வது படமாக 1991ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்தை டிஜிட்டல் தரம் உயர்த்தி நாளை மறுதினம் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் கெடுபிடி அதிகமானதால் நீர் வழியே சந்தன மரங்களை மிதக்கவிட்டு கடத்தும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் வைத்திருப்பார்கள். 34 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
'கேப்டன் பிரபாகரன்' படம் இப்போது புதிதாக வந்திருந்தால் 'புஷ்பா 2' படத்தின் வசூலையே மிஞ்சியிருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.




