பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், எண்பதுகளின் மத்தியில் ரஜினிகாந்த் படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சத்யராஜ் கிட்டத்தட்ட 38 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடித்திருப்பது இன்னொரு ஆச்சரியமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 'மிஸ்டர் பாரத்' படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
அதே சமயம் அதற்கு பின் சத்யராஜ் ஹீரோவாக மாறி மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களுக்கு வந்து விட்டார். இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் மீது அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பலமுறை கடுமையான விமர்சனங்களையும் சத்யராஜ் செய்து வந்தார். ஷங்கர் இயக்கத்தில் 'சிவாஜி' படத்தில் முதலில் வில்லனாக நடிக்க சத்யராஜை கேட்டபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் தான் 'கூலி' படத்தில் இவர்கள் இணைந்து நடிப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சத்யராஜ், ரஜினிகாந்த் இருவருமே தங்களுக்குள் அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் தங்களுக்குள் உள்ள நட்பு மற்றும் புரிதலையும் வெளிப்படையாக பேசினார்கள்.
குறிப்பாக சத்யராஜ் பேசும்போது, “47 வருடங்களாக இந்த சினிமாவில் நீங்கள் இருக்கிறீர்களா என்று லோகேஷ் கனகராஜ் என்னை ஆச்சரியமாக கேட்டார். 47 வருடமாக நான் ஒரு நடிகராக இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை. 50 வருடங்களாக ஒருவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார்.. அதுதான் பெரிய ஆச்சரியம்” என்று ரஜினிகாந்தை புகழ்ந்தார் சத்யராஜ். மேலும் படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக வருகிறார் சத்யராஜ். அவரது இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.




