இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நேற்று முன்தினம் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். தந்தை மம்முட்டி மருத்துவமனையில் இருப்பதால் அவர் விமர்சையாக எதுவும் செய்யவில்லை. என்றாலும் பலரும் அவருக்கு தங்கள் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மலையாள இளம் நடிகையும், இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி தம்பதியின் மகளுமான கல்யாணி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது வாழ்த்து பதிவில் ''துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவினைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன். திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் எனக்காக வந்து நிற்பது, அறிவுரைகள் வழங்குவது அவராகத்தான் இருக்கும்.
நான் தனியாக உணர்ந்ததில்லை அதற்குக் காரணம் துல்கர்தான். அவர் இல்லையென்றால் நான் என்னவாகிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு எல்லா தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக கல்யாணி என்ன பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அதற்கு துல்கர் எந்த அளவிற்கு உதவி உள்ளார் என்பது குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணியும், துல்கர் சல்மானும் 'வரணே அவசியமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் முதல் இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.