தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்தாண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லு', 'ஓஜி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஹரிஹர வீர மல்லு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
சில வாரங்களாக 'உஸ்தாத் பகத்சிங்' இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா , ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கிளைமாக்ஸ் காட்சியுடன் பவன் கல்யாண் அவரின் பிஸியான நேரத்திலும் நடித்து தந்து இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.