மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் | விஜி சந்திரசேகரை பாராட்டிய பாலா | மார்ச் 6ல் 9 படங்கள் ரிலீஸ் | சிம்பு படத்தில் மிருணாள் தாக்கூர் சந்தானம் | திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு | 'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதியில் தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை |

ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால், அதனால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்த நிகழ்வுகள் பல உண்டு. குறிப்பா டி.ராஜேந்தர், ரஜினி போன்றோர் இதனை செய்தனர். ஆனால் இதற்கு முன்னோடி என்.எஸ்.கிருஷ்ணன்.
நடிகராக முன்னணியில் இருந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் பெற்றவர். அவர் தயாரித்த படம் 'நல்லதம்பி'. 1936ம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான 'மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன்' என்ற படம் என்.எஸ்.கிருஷ்ணனை மிகவும் கவர்ந்தது. அதனை தமிழில் படமாக்க விரும்பி, திமுக தலைவராக இருந்த சி.என்.அண்ணாதுரையை அந்த படத்தை பார்க்க வைத்து அதற்கு திரைக்கதை, வசனம் எழுதித் தருமாரு கேட்டார். அண்ணாதுரையும் கொடுத்தார். நல்ல தம்பி உருவானது.
மதுவிலக்கு, வரதட்சணை, ஜாதி கொடுமை, தீண்டாமை போன்றவற்றை கடுமையாக எதிர்த்து இதன் கதை, வசனம் அமைக்கப்பட்டது. படத்தில் பிரச்சார நெடி அதிகமாக இருந்தால் ஒரு சினிமாவாக நல்லதம்பி ரசிக்கப்படவில்லை. இதனால் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.
இதனால் அடுத்து அண்ணாத்துரை எழுத்தில் 'தம்பிதுரை என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதனை நஷ்டமடைந்தவர்களுக்கு குறைந்த தொகைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அண்ணாத்துரை மீண்டும் கதை வசனம் எழுத ஆர்வம் காட்டாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. என்றாலும் படம் பின்னர் லேட் பிக்அப் ஆகி ஓரளவிற்கு வசூலித்ததால் யாரும் பெரிய அளவில் நஷ்டமடையவில்லை என்பதால் என்.எஸ்.கேவும் தனது திட்டத்தை கைவிட்டார்.
'நல்ல தம்பி'யில் என்.எஸ்.கிருஷ்ணன் நாயகனாககவும். டி.ஏ.மதுரம் நாயகியாகவும் நடித்தனர் . இவர்களுடன் பானுமதி, எம்.என்.ராஜம், சஹஸ்ரநாமம், காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்கள் இயக்கினார்கள். சி.ஆர்.சுப்பாராமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.




