என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், கங்குவாவில் தவறவிட்ட வெற்றியை இந்த படம் மீட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் சூர்யா. இந்த படம் தவிர்த்து இன்று சசிகுமார், சிம்ரன் நடித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி, நானி நடித்த ஹிட்- 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு -2 ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன. அதனால் தனது ரெட்ரோ படத்துடன் வெளியாகும் இந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. தன் படம் வெளியாகும் அதே நாளில் திரைக்கு வரும் மற்ற படங்களை தனக்கு போட்டியாக நினைக்காமல் அந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.