'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், தொழிற்சங்கவாதி என பன்முக திறமை கொண்டவர் ஜி.சேகரன். கலைப்புலி சேகரன் என அழைக்கப்படும் இவர், சினிமா விநியோகஸ்தராக தனது திரையுலக வாழ்க்கை துவங்கினார். பின்னர் தயாரிப்பாளர் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். 1985ல் வெளியான 'யார்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
1988ல் 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்' எனும் படத்தை இயக்கினார். அடுத்ததாக 'காவல் பூனைகள், உளவாளி' என அடுத்தடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்தினார். 1995ல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான ‛ஜமீன் கோட்டை' படம் ஹிட்டானது. விநியோகஸ்தர்கள் சங்க தலைவராகவும் இருந்தார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் இன்று (ஏப்.,13) உடல்நிலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவரது உடல், சென்னை ராயபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சேகரனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.