நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நடன நிகழ்ச்சிகளுக்காக வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். பின்னர் திரைப்படங்களில் நடனமாடினார்கள். சில நடன காட்சிகள் கதையோடு இணைந்து இருக்கும், சில காட்சிகள் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் கூடுதல் இணைப்பாக இருக்கும். அப்படி கூடுதல் இணைப்பாக 'போஜன்' என்ற படத்தில் 'வள்ளி திருமணம்' என்ற நாட்டிய நாடகம் சேர்க்கப்பட்டது. இந்த நாட்டிய நாடகம் அந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
படத்தை திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்கள். லலிதா பத்மினியின் நாட்டிய நாடகம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவங்களும் உண்டு. இந்த நாட்டிய நாடகத்திற்கு அன்றைய பிரபல டான்ஸ் மாஸ்டரான தாரா சவுத்ரி நடனம் அமைத்திருந்தார். எல்.எஸ்.ராமசந்திரன் இயக்கி இருந்தார். படத்தில் விஷூவல் எபெக்ட் காட்சிகளை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கி இருந்தார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். பி.எஸ்.கோவிந்தன் நாயகியாகவும், எஸ்.வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.
லலிதா - பத்மினியின் 'வள்ளி திருமணம்' நடனம் இடம்பெற்ற படம் என்றே விளம்பரமும் செய்தார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லலிதா மலையாளத்திலும், பத்மினி தமிழிலும் ஹீரோயின் ஆனார்கள்.