ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி |

ஒரு காலத்தில் வெள்ளிவிழா இயக்குனராக இருந்த டி.ராஜேந்தருக்கு தொடக்கம் முதலே நடிகராகும் ஆசை இருந்தது. ஒரு தலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் நடிக்கவில்லை. அதோடு தனது முகத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கமும் இருந்தது. என்றாலும் தனது படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டி வந்தார்.
இந்த நிலையில்தான் 'உயிருள்ளவரை உஷா' படத்தை தயாரித்து, இயக்கினார். இந்த படத்தில் காதலர்களுக்கு உதவும் நல்ல தாதாவாக 'செயின் ஜெயபால்' என்ற கேரக்டரை வலுவாக எழுதியிருந்தார். இந்த கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றவே ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அதோடு தேவைப்பட்டால் செயின் ஜெயபால் கேரக்டரை இன்னும் பெரிதாக்கி படத்திற்கு 'செயின் ஜெயபால்' என்றே டைட்டில் வைப்பதாக கூறினார். ஆனால் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். டி.ராஜேந்தர் எழுதும் அடுக்குமொழி வசனத்தை தன்னால் பேச முடியாது என்று கருதி தவிர்த்தாகவும் கூறுவார்கள்.
அதன்பிறகு அந்த கேரக்டரில் டி.ராஜேந்தரே நடித்தார். முதன்முதலில் டி ராஜேந்தர் முதன்மை கேரக்டரில் நடித்த படம் இது. படமும் பெரிய வெற்றி பெற்றது. ஜெயின் ஜெயபால் கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நடிக்கவும் தொடங்கினார்.