பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

சில நடிகர்களோ, நடிகைகளோ மளமளவென சில படங்களில் நடிப்பார்கள், புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி வேறு துறையின் பக்கம் சென்று விடுவார்கள். இன்றைய தலைமுறைக்கு தெரிந்தவர்களில் அரவிந்த்சாமியை குறிப்படலாம். மளமளவென வளர்ந்து வந்தவர் திடீரென சினிமாவிலிருந்து விலகி தொழிலதிபராகி விட்டார். இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.
இதுபோன்று அந்த காலத்தில் இருந்தவர் வரதன். 1947ம் ஆண்டு வெளிவந்த “கன்னிகா'' என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். இப்படத்தின் கதாநாயகி பிரபல நடிகை எம்.எஸ்.சரோஜினி. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னை, பிரபாத் டாக்கீஸில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஓடியது.
சென்னை, லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவர் வரதன். நாட்டிய ஆர்வம் மிகுந்த இவர் சாஸ்திரீய முறைப்படி சங்கீதமும் பயின்றவர். நடிக்க வருமுன் சென்னை, பாரி கம்பெனியில் வேலை செய்தார். இயல்பிலேயே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் மேடைகளில் நடனமாடிக் கொண்டிருந்த லலிதா பத்மினியை முதன் முதலாக கன்னிகா படத்தில் ஆட வைத்து அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
“பவளக்கொடி”யில் ரி.ஆர்.ராஜகுமாரியுடன் நடித்தார். “லாவண்யா” என்ற படத்தில் சூர்யபிரபாவுடன் நடித்தார். எல்லா படங்களுமே பெரும் வெற்றி பெற்றன. கடைசியாக 'உலகம்' என்ற படத்தில் நடித்தார். பெரிய நட்சத்திர பட்டாளங்ள் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத வரதன் அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. தொழிலதிபராக மாறினார்.