சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்கப் போகிறார் சிவராஜ் குமார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிவதற்கு முன்பே அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஐதராபாத்தில் நடைபெறும் ராம்சரண் 16வது படத்தின் படப்பிடிப்பில் அவருடன் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிவராஜ்குமார். பான்-இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் ஜெகபதி பாபு, ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.