என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதத் துவக்கத்தில் வெளியான படம் 'விடாமுயற்சி'. எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தாமல் முதல் சில நாட்களுடன் அந்த முயற்சி வீணாகப் போய்விட்டது.
'விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' என தொடர்ந்து குறிப்பிடும்படியான வெற்றிகளைக் கொடுத்த அஜித்துக்கு 'விடாமுயற்சி' படம் மீண்டும் ஒரு 'விவேகம்' போலத்தான் வரவேற்பைப் பெற்றது. 100 கோடிக்கு அதிகமாக வசூலித்தாலும் படத்தின் செலவுடன் ஒப்பிடும் போதும், வியாபாரத்துடன் ஒப்பிடும் போதும் லாபகரமாக அமையவில்லை.
அதை மறைக்க தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் புரமோஷனை ஆரம்பித்துவிட்டார்கள். படத்தின் டீசர் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'விடாமுயற்சி' போல அல்லாமல் இந்தப் படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் திட்டமிட்டுள்ளார்களாம். டீசர் வெளியீட்டிற்குப் பிறகு பட வெளியீடு வரை அடிக்கடி ஏதாவது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள்.