அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து டப்பிங் பணிகளையும் அஜித் நிறைவு செய்துள்ளார்.
இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அனிரூத் இசையில் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று டிசம்பர் 27ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அனிருத் இசையில் ‛சவடீகா' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பாடலை அறிவு எழுத ஆண்டனி தாசன், அனிருத் பாடி உள்ளனர். துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.