பிளாஷ்பேக் : முதல் குடும்ப படம் | பிளாஷ்பேக் : பாலைவனமாய் இருந்த நடிகர் சங்கத்தை சோலைவனமாக்கிய “சொக்கத்தங்கம்” விஜயகாந்த் | விஷ்ணுவிடம் புரொபோஸ் செய்த சவுந்தர்யா | விஷாலுக்கு கண்டிஷன் போட்ட நேஹா | 2024 - வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படங்கள் | 'விடாமுயற்சி' - முதல் பாடல் வெளியானது | ஜெயிலர் 2 படத்தில் கே.ஜி.எப் பட நடிகை | 237-வது படத்தில் சினிமாவை வியக்க வைக்கப்போகும் கமல் | ‛வீர தீர சூரன்' கதைகளம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | காதலிப்பது பிடிக்கும், ஆனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை : ஸ்ருதிஹாசன் |
கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணி நடைபெற்று வந்தது. ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் கூடுதலாக ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் கோப்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். இதையடுத்து மார்ச் மாதத்தில் ஜெயிலர் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.