'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‛கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் சிறிது நேரம் காண்பித்தனர். தற்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
இது குறித்து படை தலைவன் பட இயக்குனர் அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைத்துள்ளோம். அவரது கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் என்ற படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வச்ச தங்ககுடம் என்ற பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். இந்த பாடலை லப்பர் பந்து படத்திலும் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே நாங்கள் இந்த பாடலை வைத்து விட்டோம். எங்கள் படம் திரைக்கு வர தாமதம் ஆகிவிட்டது. குறிப்பாக விஜயகாந்த்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் படை தலைவன் படத்தில் இடம் பெற்றுள்ளது'' என்கிறார்.