கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது வாங்கிய அவர், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் அவர் பிசியாக உள்ளார். 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவரது வக்கீல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை : திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்து உள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. இந்த இடைவெளியை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.