செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாடலாக சில விளம்பர படங்களில் நடித்த இவர், சினிமாவுக்கு வரும் முன்பு பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக பகிர்ந்துள்ளார். காவ்யா தாபர் கூறுகையில், “சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குனர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். அங்கு அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். நான்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து பின்னர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு வந்துவிட்டேன். என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.