நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜயகாந்தை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம் 'தூரத்து இடி முழுக்கம்'. அதற்கு முன் அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவருக்கு முதல் படம் போன்ற அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தை கே.விஜயன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் வெளியான 'செம்மீன்' படத்தின் சாயலில் இந்த படம் உருவாகி இருந்தது.
பானைகள் செய்யும் குயவர் குல பெண்ணான செல்லி, மீனவ குல இளைஞரான பொன்னனை காதலிப்பார். அந்த காதலில் பல பிரச்னைகள். ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்கப்போன பொன்னனை காணவில்லை. அவன் கரை திரும்பவில்லை. இதனால் செல்லிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது. கணவன் மனைவியை சந்தேகம் கொண்டு அடித்து கொடுமைப்படுத்துகிறான்.
இவர்கள் வாழ்க்கைக்குள் ஒரு மந்திரவாதி நுழைந்து செல்லியை அடைய நினைக்கிறான். நிர்கதியற்ற செல்லி ஒரு கையில் அகல் விளக்கையும், மறு கையில் சங்கையும் வைத்துக் கொண்டு இயற்கையை நோக்கி வேண்டுகிறார். எங்கோ தூரத்தில் கேட்கும் இடியோசை அவள் கேட்டதை செய்யும், அவள் கல்லாக அங்கேயே நின்று விடுவாள். இப்படியான கதை இது.
இந்த படத்தில் நடித்த பூர்ணிமா அதன்பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்தில் முதன் முறையாக லைவ் சவுண்ட் பயன்படுத்தப்பட்டது. படத்தின் கதை முழுக்க கடற்கரையை ஒட்டி நடப்பதால் அலையின் ஓசையே படத்தின் பின்னணியாக பயன்படுத்தப்பட்டது. இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி கடல் அலை ஓசையை அப்படியே பதிவு செய்து அதையே பின்னணி இசையாக அமைத்தார். இந்த படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டது.