சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் அர்ஜுன் தாஸ் இதில் நடிக்கின்றார் என்பதை அர்ஜுன் தாஸ் ஒரு அறிக்கையுடன் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையின் படி, "நான் சென்னைக்கு நடிகராக வேண்டும் என்கிற கனவுடன் வந்து இறங்கினேன். ஆனால், எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. அப்போது சுரேஷ் சந்திராவின் டி ஒன் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அஜித்தை சந்தித்து பேசும் வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தது. நீங்கள் நம்புவீர்களா என தெரியவில்லை. வீரம் படத்தின் டீசரை யூடியூப்பில் அப்லோட் செய்ததில் நானும் ஒருவன். மாஸ்டர் படத்தை பார்த்த அஜித் கண்டிப்பாக நாம் ஒரு படம் பண்ணலாம் என்றார். கடைசியாக என் ஆசை நிறைவேறியது. அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து நடிக்கின்றேன். அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன். அஜித் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக விநியோகம்
இந்த படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இவர் அஜித் நடித்த துணிவு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.