ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இதில் பாபி டியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருவதையொட்டி தற்போது இதற்கான புரோமொசன் நிகழ்ச்சிகள் வட இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளனர். இதில் சிறுத்தை சிவா, சூர்யா, திஷா பதானி, பாபி டியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா குறித்து பேசிய பாபி டியோல், "அவரின் உயரம் குறித்து கவலை பட வேண்டாம். ஏனெனில், அவரின் நடிப்பு திறமையினால் மற்றவர்களை விட உயரமாக நிற்கிறார். அவரின் நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. அவர் செய்த அனைத்து ஸ்டன்ட் காட்சிகளும் எந்தவொரு டூப் இல்லாமல் அவரே செய்தார். அவர் வலிமையான நபர்" என தெரிவித்தார்.