லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

டாப்பில் உள்ள ஹீரோக்கள் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிப்பது இப்போது அதிகமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அரிதானதாக இருந்தது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாராஜ பாகவதர் 'தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சத்திய சீலன்' என்ற படத்தை 52 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தேவசேனா நடித்தார். எம்.ராமசாமி அய்யர் மன்னர் விக்ரமசிங்காக நடித்தார். பத்மாவதி பாய் ராணி வேதவல்லியாக நடித்தார். சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார், ஜானகி கவிகுஞ்சாராம் இசை அமைத்தார்.
ஜோதிபுரி என்ற கற்பனை தேசத்தின் மன்னர் திடீரென இறந்து விடுகிறார். இதனால் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ராஜினாமா செய்து விடுகிறார். இதனால் 3வது இடத்தில் இருந்த அமைச்சர் மன்னராக முயற்சிக்கிறார். ஆனால் மக்களோ இறந்த மன்னரின் மகனும், படைத் தளபதியுமான சத்யசீலனே மன்னராக வேண்டும் என்கிறார்கள். இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் சத்யசீலனை ஒழிக்க பல சதி வேலைகளை செய்கிறார் அமைச்சர். அதை முறியடித்து சத்ய சீலன் எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. சத்யசீலனாக தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரதி இப்போது இல்லை. சொல்லுபாப்பா... என்ற ஒரு பாடல் மட்டுமே தற்போது படத்திற்கு அடையாளமாக இருக்கிறது.




