ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் |
அஜித் குமாரின் மனைவியான ஷாலினி அஜித், நேற்று தனது மகன் ஆத்விக்குடன் ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் ஷாலினி.
அந்த வீடியோவில், ஸ்பெயின் நாட்டு சாலையில் அஜித்தும், ஷாலினியும் ஜாலியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி காதலருடன் இருப்பதற்கு இது அற்புதமான இடம் என்று ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார் ஷாலினி.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.