கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் |

விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மிகவாதியாக திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஸாரி நோ கமென்ட்ஸ்' எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.
மேலும் அவர், 'தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தர்பார் போன்று வேட்டையன் இருக்காது, வித்தியாசமாக இருக்கும். வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்றார் ரஜினி.
சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள். உங்களை மாதிரி திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி' என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.




