வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா |
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'டீசல்'. கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தெர்ட் ஐ புரொடக்சன்ஸ், எஸ்.பி.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இது ஹரிஷ் கல்யாண் திரை பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக அமைந்துள்ளது. இதனால் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த படக்குழு இப்போது இவ்வருட தீபாவளி தினமான அக்டோபர் 31ம் தேதி ‛டீசல்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இதே தேதியில் சிவகார்த்திகேயனின் ‛அமரன்', ஜெயம் ரவியின் ‛பிரதர்' போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகிறது.