வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… |

யோகிபாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்துள்ள படம் ‛மலை'. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.
மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வருகிறார்கள். தமிழக மலைக் கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப் பற்றிய ஒரு படைப்பாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் பாடல்கள் வெளியாக உள்ளன.