மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் அனைத்துமே தமிழ் படங்கள்தான் என்ற கருதிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மலையாளியான எம்.ஜி.ஆர் நடித்த ஒரே மலையாளப் படம் 'ஜெனோவா'. 1953ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் தயாரித்தனர். நாயகன் எம்ஜிஆர், நாயகி பி.எஸ்.சரோஜா. இருவரும் இரு மொழிகளிலும் நடித்தனர். வில்லனாக தமிழில் பி.எஸ்.வீரப்பா நடிக்க, மலையாளத்தில் அந்த வேடத்தில் ஆலப்பி வின்சென்ட் நடித்தார்.
இதனை மலையாள தயாரிப்பாளர் இ.பி.எப்பன் என்பவர் தயாரித்திருந்தார். மலையாள இயக்குனர் நாகூர் இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ஞானமணி, டி.ஏ.கல்யாணம் என 3 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். இது சரித்திர கதையாக இருந்தாலும் மாறுபட்ட முறையில் இதன் கதை எழுதப்பட்டிருந்தது.
படத்தில் எம்ஜிஆரின் பெயர் சிப்ரஸோ, வில்லன் வீரப்பாவின் பெயர் கோலோ, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் பெயர் அன்னாஸ். மலையாள வசனத்தை சுவாமி மிரம்மவ்ருதனும், தமிழ் வசனத்தை சுரதாவும் எழுதியிருந்தனர். இந்த படம் முதலில் மலையாளத்தில் வெளிவந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்தது.