தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு |
2024ம் ஆண்டில் முதன் முதலில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது.
100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படும் இப்படம் 50வது நாளைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் 25 நாட்களைக் கடந்து சில படங்கள் ஓடியுள்ளன. ஆனால், 50 நாட்களைக் கடந்த ஓடியுள்ள முதல் படம் இதுதான். ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளிவந்து அது 50 நாட்களைக் கடந்து ஓடுவதும், 100 கோடி வசூலிப்பதும் இதுவே முதல் முறை.
தற்போது ஓடிடியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. பேய்ப் படம் என்பதால் அங்கும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. விரைவில் 'அரண்மனை 5' படத்தின் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.