பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பிரபல பின்னணி பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கி சுதித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தர். பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, திடீரென கடந்த சில நாட்களாக பல யு டியூப் சேனல்களுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்து வந்தார். இதில் பல முன்னணி நடிகர்கள் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் 'ஓரின சேர்க்கையாளர்' என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சுசித்ராவிடம், 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “சுசித்ராவின் பேட்டி, சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னைப்பற்றியும், என்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.