50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் | மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து | ‛சிந்து பைரவி, முகவரி' மாதிரி ‛சைக்கிள் கேப்' | கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி | கதையின் நாயகன் ஆன ‛மாமன்' இயக்குனர் | கதைநாயகனாகவும் நடிக்கிறேன், காமெடியனாகவும் வருகிறேன் : அப்புக்குட்டி | ஆர்.பி.சவுத்ரிக்கு இரங்கல், விஜய்க்கு ஆதரவு : சரி, கமல் எங்கே? | 25வது நாளில் 66 கோடி வசூலித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல் |

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'புஷ்பா… புஷ்பா' பாடல் மே 1ம் தேதி யு டியுபில் வெளியானது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான அப்பாடலுக்கு தமிழில் மட்டுமே மிகவும் குறைவான பார்வைகள் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குப் பாடல் யு டியூபில் 21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே சமயம் தமிழ்ப் பாடலுக்கு ஒரே ஒரு மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. பெங்காலி மொழி பாடலுக்குக் கூட 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ள நிலையில் தமிழ் மொழிப் பாடலுக்கு அதில் பாதியளவுதான் பார்வைகள் கிடைத்துள்ளது.
ஹிந்தி மொழி பாடல் 24 மில்லியன் பார்வைகளையும், கன்னடம், மலையாளம் 1.8 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.
'புஷ்பா' முதல் பாக பாடல்கள் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.