ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23வது படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இந்நிலையில் இப்படத்திற்கு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் நடக்கும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளில் தமிழக திரைப்படத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்ற முடியாது. அந்தந்த மாநிலத் தொழிலாளர்களை வைத்துத்தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என அந்த மாநில சங்கத்தினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.
ஆனால், சென்னையில் நடைபெறும் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை கொண்டு வந்து படப்பிடிப்பு நடத்துவதால் இங்குள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பிற்கு 'தாஹிர்' எனும் வெளிமாநில அவுடோர் யூனிட்டை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள சங்கத்தினர் இன்று முதல் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார்கள்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிக முடிவு ஒன்று எட்டப்பட்டு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுடன் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். ஆனால், இந்த விவகாரம் எப்போது வேண்டுமானாலும் சர்ச்சையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தயாராகும் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதா என தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாம்.




