அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி | மலையாளத்தில் அறிமுகமாகும் இர்பான் கான் மகன் | துரந்தர் 3 பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட சூசக தகவல் | பிரபாஸ், அல்லு அர்ஜூன் வழியில் சந்தீப் | 'சிட்டாடல்' 2வது சீசன் வெளியானது |

நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவா நடித்து சமீபகாலத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் 'பேட்ட ராப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் வேதிகா, ரியாஸ்கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பேட்ட ராப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பிரபுதேவா, வேதிகா இருவரும் துள்ளல் நடனம் ஆடுவது போன்று வெளியிட்டுள்ளனர்.