100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை 2024 கோடை விடுமுறைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 2024 ஏப்ரல் மாதத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் தனுஷ் 50வது படத்தின் ரிலீஸ் தேதியை சற்று தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். விரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.




