வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
வாகைசூட வா, மௌனகுரு, கண்பேசும் வார்த்தைகள், அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. தற்போது 'தூக்குதுரை' படத்தில் நடித்துள்ளார். இனியா சினிமாவில் நடிப்பதோடு டிசைனிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடங்கிய 'அனோரா ஸ்டூடியோ' தனது முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பவில்லை. கடவுள் கொடுத்த அறிவை வைத்து பிசினஸிலும் கவனம் செலுத்த முடிவு செய்துதான், இந்த ஸ்டுடியோவை தொடங்கினேன். இங்கு வாடகைக்கு உயர்தர பெண்கள் ஆடைகள் கிடைக்கும். போட்டோ ஷூட் எடுக்கலாம். ஆடை தயாரிப்பு வேலைகள் நடக்கிறது. இந்த பிசினஸ் எனக்கு கைகொடுத்துள்ளதால், தற்போது இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பேஷன் டிசைனிங் படிக்கப் போகிறேன். இந்த பிசினஸை ஆன்லைனிலும் நடத்துகிறேன். இப்போது துபாயில் இதை விரிவுபடுத்த இருக்கிறேன்.
சினிமா கேரியரை பொருத்தவரையில் 'தூக்குதுரை' படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளேன். மலையாளத்தில் ஒரு படம், வெப்சீரிஸ் என நடித்து வருகிறேன். பிசினஸில் ஈடுபட்டாலும் சினிமாவை மறக்க மாட்டேன். பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை. என்னை தேடிவரும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன். வருடத்திற்கு எனது நடிப்பில் நான்கைந்து படங்கள் வருகின்றன. எதிர்காலத்தில் படம் டைரக்டு செய்யும் ஆர்வம் இருக்கிறது. கதையும் தயாராக உள்ளது. வாய்ப்பு அமையும்போது படம் இயக்குவேன். என்றார்.