டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில் ‛துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இமயமலையில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். ஆற்றில் நிர்வாண நிலையில் குளிப்பது போன்றும், சமைப்பது போன்றும் எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இமயமலை தெய்வீக தன்மை மிக்கது. ஒவ்வொரு வருடமும் 7 முதல் 10 நாட்கள் வரை அங்கு தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாண படங்களை வெளியிடுவது குழந்தைகள் மனதில் தேவையில்லாமல் மன குழப்பத்தை ஏற்படுத்தும். அதோடு காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927ன் கீழ் குற்றமாகும். பாலித்தீன் பைகளில் இமயமலையில் அவர் வீசி எரிந்திருப்பது சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அம்சம். இமயமலையின் எந்த பகுதிக்கு அவர் சென்றார். அதற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.




