ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான நவ.,12ம் தேதி காலை 10:45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாவதால் டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 34 வினாடிகள் எனக் கூறப்படுகிறது.