Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் கொடுத்த ‛பில்டப்' : முன்னோட்டம் வெளியீடு

23 அக், 2023 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Santhanam-80s-Buildup-video-goes-viral

குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. இதில் கதாநாயகியாக பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி விரைவாக முடிந்தது. முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் இந்த படத்தை எடுத்துள்ளனர். தற்போது இந்த படத்தை பற்றிய அறிமுக முன்னோட்ட வீடியோவை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், இந்த திரைப்படம் 80ஸ் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது என மொட்டை ராஜேந்திரன் பின்னணி குரல் கொடுக்க, சந்தானம், ராதிகா பிரீத்தி இருவரும் மாப்பிள்ளை - பெண்ணாக காட்சி அளிக்கின்றனர். போட்டோ எடுக்க இருவரையும் சிரிக்க சொல்ல சந்தானம் நன்றாக சிரிக்க, ராதிகாவை சிரிக்க சொல்லி சந்தானம் மிரட்டுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வீடியோவின் முடிவில், ‛‛பேன்ட் பாக்கெட்டில் செல்போன், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள ஜிங் சான் கார்ட்டூன் கதாபாத்திரம், டிவியில் ஒட்டப்பட்டுள்ள நயன்தாராவின் போட்டோ...'' ஆகியவற்றை சுட்டிக்காட்டி இவுங்களா 80ஸ் கிட்ஸ் என ரெடின் கிங்ஸ்லியின் குரல் ஒலிக்கிறது. படத்தின் தலைப்பு போன்ற ஒரே பில்டப்பாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முன்னதாக படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த வீடியோவை வெளியிடும் முன்பாக வெறும் கமல் பட வசனங்களை பதிவிட்டு பில்டப் கொடுத்து வந்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் ‛பொன்னியின் செல்வன், விடுதலை'கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ... 9 படங்களில் மட்டும் ரூ.2000 கோடி வசூல் : அடிச்சு தூள் கிளப்பிய 2023 தமிழ் சினிமா 9 படங்களில் மட்டும் ரூ.2000 கோடி வசூல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in