'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

கமல்ஹாசனும், மணிரத்னமும் நாயகன் என்ற படத்தில் முதன் முதலாக இணைந்தார்கள். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த போதும் அதன் பிறகு எந்த படத்திலும் அவர்கள் இணையவில்லை. தற்போது மீண்டும் கமலின் 234வது படத்தில் அவர்கள் கூட்டணி இணையப் போகிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கும் 234வது படத்தின் அறிமுக டீசர் பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த டீசர் வருகிற நவம்பர் 7ம் தேதி உங்களது பார்வைக்கு வைக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில், கமலின் பிறந்தநாளில் அவரது 234வது படத்தின் டீசர் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.




