அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய் நடித்து இன்று வெளிவந்த 'லியோ' படத்திற்கு முன்பாகவே அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒரு வாரம் நடந்தது. 'லியோ' வெளியீட்டிற்காக சிறிது இடைவெளிவிட்டுள்ளனர். விரைவில் அதன் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் விஜய் 68 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு பதிவிட்டிருந்த 'லியோ' படத்தின் டுவீட்டை ரீபோஸ்ட் செய்து, “நாம் ஆரம்பிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'லியோ' படம் வெளிவரும் வரை விஜய் 68 படத்தின் அப்டேட் எதையும் வெளியிட வேண்டாம் என லியோ படக்குழுவினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது படம் வெளியாகிவிட்டதால் அடுத்து விஜய் 68 பற்றி சில அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பூஜை நடந்து, ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பும் முடிந்துள்ளதால் விஜய் 68 குழுவினர் விரைவில் படத்தில் நடிப்பவர்கள், மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிடலாம்.