அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கும்கி படங்களின் மூலம் அதிரடியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லட்சுமி மேனன், அதன்பிறகு பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன் படங்களில் நடித்தார். எல்லா படங்களுமே வெற்றி பெற்றது. வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார். அதன்பிறகு அவர் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை. மேலும் உடல் எடையும் அதிகரித்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'புலிக்குத்தி பாண்டி' படத்தில் நடித்தார். அதற்கு பிறகும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சமூக வலைத்தளப் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். சமீபத்தில் வெளியான 'சந்திரமுகி 2' படத்தில் அவர் சந்திரமுகியாக வந்து போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. கங்கனாவை விட அதிகம் பேசப்பட்டார். தற்போது அவருக்கு மேலும் வாய்ப்புகள் வர துவங்கி உள்ளது.
கடந்தாண்டு அகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில் கடைசியாக ஒரு போட்டோ போட்டவர் நேற்று ஒரு சேலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்திருக்கிறார். இதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது பாலோயர்ஸ்.