பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கமல்ஹாசன் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க கடந்த வருடம் வெளிவந்த படம் 'விக்ரம்'. அப்படத்தில் 'கைதி' படத்தில் இடம் பெற்ற நரேன் கதாபாத்திரம் சில காட்சிகளில் இடம் பெற்றது. கார்த்தி கதாபாத்திரத்தின் குரலை மட்டும் காட்டியிருந்தார்கள். அதனால், அப்படத்திலிருந்து 'எல்சியு', அதாவது 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.
'விக்ரம்' படத்தை அடுத்து 'லியோ' படத்தை லோகேஷ் இயக்க ஆரம்பித்ததும், அதில் 'எல்சியு' இருக்கிறதா இல்லையா என்பது நேற்று வரை கேள்வியாக இருந்து வந்தது. ஆனால், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தில் 'எல்சியு' இருக்கலாம் என்ற ரகசியத்தை உடைத்துவிட்டார். அதனால், காலை முதல் ரசிகர்கள் 'எல்சியு, எல்சியு' என டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த வருடம் 'விக்ரம்' படம் வெளிவந்த போது, அதற்கு முன்தினம், ''கைதி'யை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு 'விக்ரம்' அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். 'கைதி'க்கும் 'விக்ரம்' படத்திற்கும் தொடர்பு இருந்தது.
நாளை 'லியோ' வெளியாக உள்ள நிலையில் அதைப் பார்ப்பதற்கு முன்பாக எந்தப் படத்தை மறுபார்வை பார்த்துவிட்டு வாருங்கள் என லோகேஷ் இன்றிரவு சொல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.