திருத்தப்பட்ட வீடியோவுடன் 'வா வாத்தியார்' தெலுங்கு ரிலீஸ் | துபாயில் சிக்கி தவிக்கும் அண்ணன்; ஹைதராபாத்தில் 3வது திருமண விழா நிகழ்வை கொண்டாடிய தம்பி | உதயநிதியை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் | 42 ஆண்டுகளாக நடிக்கிறேன், என் முதல் படம் எது தெரியுமா? : சின்னி ஜெயந்த் | கிக் பாக்ஸிங் வீராங்கனையாக நடிக்கும் ஸ்ரீலீலா | அல்லு சிரிஷ் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்திய பசில் ஜோசப் | தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதா : ருக்மிணி வசந்த் கண்டனம் | ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | சல்மான்கான் உடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அவரது வளர்ப்பு குதிரை | இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் |

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தான் நடித்து வந்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் நடிகர் ரஜினிகாந்த். அந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தனது 170வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடித்த 2.0, தர்பார் ஆகிய படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் இப்போதிருந்தே ஒரு தரப்பினர் இந்த படத்திற்கான தங்களது எதிர்ப்பினை "வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த்" என்கிற ஹேஷ்டேக் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கோபம் நேரடியாக ரஜினிகாந்த் மீது இல்லை. இந்த படத்தை இயக்கும் டிஜே ஞானவேல் மீதுதான்.
ஏற்கனவே அவர் இயக்கிய ஜெய் பீம் படத்தில் தங்களது வன்னியர் சமுதாயத்தை பற்றி தவறான பிம்பம் ஏற்படுத்தும் விதமாக சில கதாபாத்திரங்களை புகுத்தி சில சர்சசை கருத்துக்களையும் கூறியதாக அந்த படம் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.
தற்போது அந்த இயக்குனரின் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் இப்போது புதிதாக இப்படி ஒரு எதிர்ப்பு தலைதூக்கி உள்ளது. ஜெய்பீம் படத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக டிஜே ஞானவேல் தனது தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த படத்தை வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ரிலீசாகும்போது புறக்கணிக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் சில தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் தமிழக சிஇஓ ஆக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி கே மணியின் மகன் ஜி கே எம் தமிழ் குமரன் இருப்பதால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அழகாக சமாளித்து விடலாம் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.




