ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் |

மலையாளத் திரையுலகத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளில் ஒருவர் என பாராட்டப்படுபவர் நிமிஷா சஜயன். மும்பையில் பிறந்து, படித்து வளர்ந்த நிமிஷா 2017ல் வெளிவந்த 'தொண்டிமுத்தலும் ட்ரிசாக்ஷியும்' என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும், ஒரு மராத்தி படத்திலும் நடித்த நிமிஷா இந்த வாரம் வெளியாக உள்ள 'சித்தா' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
அப்படத்தில் துப்புரவு பெண் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் நிமிஷாவின் நடிப்பைப் பார்த்தவர்கள் தமிழிலும் அவர் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தை அடுத்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மும்பையில் வளர்ந்ததால் தமிழைக் கொஞ்சமாகப் பேசும் நிமிஷா விரைவில் நன்றாகப் பேசக் கற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம். மலையாள நடிகைகள் தமிழில் எளிதில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிடுவார்கள். அது நிமிஷாவுக்கும் நடக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.




