ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதே காணாமல் போனார். இப்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களிடையே கலந்து உரையாடி வருகிறார்.
தற்போது கிரண் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒருவரை ரொம்ப காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் மனம் உடைந்து போனேன். அதன் பிறகு படங்களில் சில காலம் நான் நடிக்காமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வி தான் காரணம். ஒருவேளை அப்போது தெளிவாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால், தவறான முடிவு எடுத்து என் வாழ்க்கை நாசமானது. இப்போது மீண்டும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் , யாரும் அழைக்கவில்லை. நான் நடித்த 5 படங்கள் தொடர் வெற்றியைத் அடைந்தது. இப்போது புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் .